நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில் இலங்கை.
நயினாதீவு நயினை நாகபூசணி அம்மன் கோயில் முன் பக்கத் தோற்றம்...

வட இலங்கைத் தீவுகளில் ஒன்றான நயினாதீவு வரலாற்று பழமை மிக்கதொரு இடமாகும். இந்த தீவில் நாகர்களின் ஆதிக் குடியிருப்பாலும், அங்கு இடம் பெற்ற நாக வழிபாட்டாலும், நாகங்கள் அதிகமாக அங்கு வாழ்ந்ததாலும் நாகதீவு என்றும், நயினாதீவு என்றும் பெயர் வழங்கப்பட்டது.
நாகர்கள் வாழ்ந்த காலத்திலேயே நயினாதீவில் மக்கள் வாழ்ந்திருக்கின்றார்கள். ஏறத்தாள 14000 ஆண்டுகளுக்கு முன்பே நயினாதீவில் குடியேற்றம் இருந்தது என்றும். அவர்களால் ஸ்தாபிக்கப் பட்ட நாக பூசணி அம்மன் கோவிலின் மூலஸ்தானத்தில் உள்ள நாக விக்ரகம் 14000 ஆண்டுகளுக்கு மேற்பட்டது என்றும் கட்டிட, சிற்பக்கலை பொறியியல் நிபுணரான திரு. எம். நரசிம்மன் அவர்கள் தனது நூலில் (11.03.1951) குறிப்பிட்டுள்ளார்.
நயினாதீவில் நயினை நாக பூசணி அம்மன் ஆலயமே மிக்கபெரியதும், புகழ் வாய்ந்ததும் தொன்மையானதுமாகும்.
Leave a Comment