ஸ்ரீலஸ்ரீ சூர்யாதாஸ் ஸ்வாமிகளின் ஸ்ரீ சூரியாலய தியான மண்டபம், மருத்துவ நகர், பழனி
இன்று மீண்டும் ஸ்ரீலஸ்ரீ சூர்யாதாஸ் ஸ்வாமிகளின் ஸ்ரீ சூரியாலய தியான மண்டபம், மருத்துவ நகர், பழனி செல்லும் வாய்ப்பு கிட்டியது.
தலைச்சேரி ஸ்ரீசூர்யநாராயண ஸ்வாமிகளை குருவாக கொண்டு 1976 முதல் 2008 சமாதி ஆகும்வரை அவர் வாழ்ந்து ஆசிபுரிந்த இடம். இங்கு இவர் செய்த அன்னதான காரியங்கள் மிக மிக வியப்பை தருவன. உடல் ஊனமுற்றோருக்கென்ன இவர் ஏற்பாடு செய்த அன்னதானங்கள் மிக ப்ரசித்திபெற்றவை. ஆம்! உலகின் அனைத்து வகையான உணவுகளையும் வரவழைத்து இவர் செய்த அன்னதானங்கள் இன்றும் அங்கு பேசப்படுபவையாக உள்ளது. அதே சமயம் அவர் தனக்கான கஞ்சி உணவை தானே சமைத்து அதை மட்டுமே உண்டு வாழ்ந்து வந்தார்.மேலும் இங்கு இவர் பலஆச்சர்யங்களை நிகழ்த்தியுள்ளார் , என்று உடன் இருந்த பக்தர்கள் கூறுகின்றனர்
இன்றும் இவர் சமாதி அமைந்துள்ள தியான குடில் அங்கு வருபவரின் மனக்குறையை போக்க வல்ல சிறப்புடன் தனித்தன்மையுடன் திகழ்கிறது. ஆன்மீக அன்பர்கள் கட்டாயம் செல்ல வேண்டிய திருக்கோயில்.
Leave a Comment