அபிமுக்தீஸ்வரர் திருக்கோயில் , திருநெல்வேலி


2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம். வயல் வெளிகள் சூழ்ந்த தாமிரபரணி நதிக்கரையோரம் இயற்கை எழில் சூழ அமைந்துள்ள திருக்கோயில். உள் நுழைந்தவுடன் இடதுபுறத்தில் சிவனும் சக்தியும் கலந்த அர்த்தநாரீஸ்வரர் தோஷங்களை போக்கி அமர்ந்திருக்கிறார்.

  அபிமுக்தீஸ்வரர் திருக்கோயில் , திருநெல்வேலி 

நவகைலாய தலங்களில் ஒன்றான இந்த புரதான திருகோயில் அமைந்துள்ள ஊர் கோடங்க நல்லூர் .இது திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து சேரன்மாதேவி செல்லும் வழியில் சுமார்  15 km தொலைவில் இடதுபுறம் பிரிந்து செல்லும் வயல்கள் சூழ்ந்த சாலையில் தாமிரபரணி கரையோரம் அமைந்துள்ளது.



கருவறையில் கைலாசநாதர் கம்பீரமாய் அமர்ந்து இருக்கிறார் உள்ளே தனி சந்நிதியில் அம்மன் அருள் ஆசி புரிகிறாள் . சிவபக்தர்கள் தவறாமல் செல்ல வேண்டிய திருத்தலம் . 





No comments

Powered by Blogger.