இந்த வலைப் பூவில் உங்கள் ஊரில் உள்ள ஆலயங்கள் பற்றிய தகவல்களை உங்கள் பெயரிலேயே வெளியிட ஆலய புகைப்படத்துடன் விபரங்களை அனுப்பலாம் aalayankal@gmail.com

Tuesday, September 29, 2015

ஆதிதிருவரங்கம், திருவண்ணாமலை மாவட்டம்

ஆதிதிருவரங்கம், திருவண்ணாமலை மாவட்டம் 
.......................................................................................................

இம்முறை திருவண்ணாமலை பயணத்தின் மறுநாள் ஆதிதிருவரங்கம் என்னும் பழங்கால திருக்கோயில் பற்றி அறிந்து அங்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.  திருவண்ணாமலையில் இருந்து 30 நிமிட பயனதூரத்தில் அமைந்துள்ளது இந்த தொன்மை வாய்ந்த திருத்தலம். சிறு கிராமம் ஒன்றில் வறண்ட ஆற்றங்கரையின் அருகே கம்பீரமாய் காட்சி தருகிறது .


நீண்ட மற்றும் உயர்ந்த மதில் சுவர்கள் ஒரு பழங்கால கோட்டையை நினைவு படுத்துகிறது . நாங்கள் அங்கு சென்ற பொழுது திரண்டிருந்த மக்கள் வெள்ளம் கண்டு திகைப்படைந்தோம். பின்பு தான் புரட்டாசி முதல் சனிக்கிழமை என்பதால் பெருமாளை தரிசிக்க குவிந்த பக்தர்கள் என்பதை அறிந்து வியந்தோம். 

வியப்பை மேலும் அதிகரித்த செய்தி அது உள்ளூர் மக்கள் கூட்டம் இல்லை என்பதும் அவர்கள் அனைவரும் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் . ஒவ்வொரு வருடமும் புரட்டாசி முதல் சனிக்கிழமை சேலத்தை சார்ந்த பக்தர் ஒருவர் 30 க்கும் மேற்பட்ட பேருந்துகளை கொண்டு பெருந்திரளான மக்களை அழைத்து வந்து பூஜைகள் மற்றும் மிகசிறப்பான அன்னதானம் செய்கிறார் !


அரங்கநாதராய் காட்சியளிக்கும் பெருமாளை காணக்கண் கோடி வேண்டும் என்பது இங்கு நிதர்சனம்.  கோயிலின் தல வரலாறு அறிய இயலவில்லை என்பதே சற்று வருத்தம். எனினும் இந்த பதிவை படிக்கும் எவரும் அதை  அறிந்திருந்தால்  aalayankal@gmail.com  என்ற மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். புராதன சிலைகளும் மிகப்பெரிய வெளிபிரகாரமும் ஓங்கி வளர்ந்த தேக்கு மரங்களும் பழமைக்கு அழகு சேர்க்கிறது .

மூலவரின் திருகோவிலின் திருக்கலசங்கள் 


சிறப்புக்கு சிறப்பாய் அங்கு அமைந்துள்ள தொன்மை வாய்ந்த நெற்களஞ்சியம் 
பெரும் வியப்பை தருகிறது Saturday, August 29, 2015

மருதமலை முருகன் தங்கரத பவனி

               பௌர்ணமி தினமான இன்று மருதமலை முருகன் தங்கரத பவனி
Monday, August 17, 2015

லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில், தளபதி சமுத்திரம்,கீழூர்

Mr.Balasubramanian from THALAPATHISAMUDRAM KEELOOR near by VALLIOOR send the following temple informations in email

அருள்மிகு லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில்மூலவர் : லட்சுமி நாராயண பெருமாள் 
உற்சவர்ஸ்ரீ நிவாஸன்
தல விருட்சம்துளசி
தீர்த்தம் :கிணறு தீர்த்தம்
ஆகமம்/பூஜைவைகானஸம்
பழமை : 1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் :பெருமளஞ்சி(பெரும்வளம்செய்).
ஊர்தளபதி  சமுத்திரம்,கீழூர்
மாவட்டம் : திருநெல்வேலி
மாநிலம் : தமிழ்நாடு
திருவிழா:
வருஷாபிஷேகம்,கிருஷ்ண ஜெயந்தி, ராமநவமி, வைகுண்ட ஏகாதசி,புரட்டாசி சனிக்கிழமை கருடசேவை,திருக்கார்த்திகை தீபம்,மார்கழி மாதம் பஜனை .
தல சிறப்பு:
  புதன், சுக்ரன் பரிகார தலம்.
திறக்கும் நேரம்:
காலை 7மணி முதல் 10 மணி வரை, மாலை மணி 6 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்
முகவரி:
அருள்மிகு லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில்,தளபதி  சமுத்திரம்-கீழூர்,திருநெல்வேலி-627101.
பொது தகவல்:
மார்கழி மாதம் 30 நாட்களும் காலை 5 மணி முதல் 7.30மணி  வரை  திருப்பாவை திருப்பள்ளிஎழுச்சி  மற்றும் பஜனை நாமசங்கீர்த்தனமும் நடைபெறுகிறது.எல்லா சனி மற்றும் ஞாயிறு தோறும் மாலை 6.30 முதல் 8.30 வரை மாலை பஜனை நடக்கிறது.வருஷாபிஷேகம் மற்றும் புரட்டாசி மாதம் சனிக்கிழமை தோறும்  கருடசேவை நடைபெறுகிறது.
பிரார்த்தனை:
           திருமணத் தடை, குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், கடன் பிரச்சனை, கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பெற, உடல்நலம் குன்றியோர், தொழில் பாதிப்படைந்தோர் இக்கோயிலுக்கு வந்து முறையாக பூஜை செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.இங்குள்ள ஆஞ்சநேயரை மனமுருகி வேண்டினால் சனிதோஷ நிவர்த்தி ஏற்படுவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.இங்கு வேண்டிக்கொண்டால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்,கருடசேவை, திருவோண நட்சத்திரத்தில் பாயாச நைவேத்யம் படைத்தல், துலாபாரம் மற்றும் திருவாபரணங்கள் செலுத்துதல்.பிரார்த்தனை நிறைவேறியதும் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலையும், வடை மாலையும் சாத்தி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
கிழக்கு நோக்கி அமைந்துள்ள ஆலயத்தின் முகப்பைத் தாண்டி உள்ளே நுழைந்ததும் அழகான சிறப்பு மண்டபம். மண்டபத்தின் நடுவே கருடாழ்வார் பெருமாளைப் பார்த்தபடி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். அதையடுத்து மகாமண்டபம். மகாமண்டபம் நுழைவாயிலை இருபக்கமும் கிருஷ்ண பரமாத்மா திருமேனி அலங்கரிக்க மகாமண்டபத்தின் முகப்பைத் தாண்டி உள்ளே நுழைந்ததும் வலதுபுறம் ஆஞ்சநேயரின் சன்னதி உள்ளது. அடுத்து அர்த்த மண்டப நுழைவாயில் உள்ளது. அடுத்துள்ள கருவறையில் பெருமாள், அருள்மிகு லட்சுமி நாராயண பெருமாள் என்ற திருநாமத்துடன் கீழ்திசை நோக்கி சேவை சாதிக்கிறார்.மூலஸ்தானத்தில் பெருமாள், மடியில் மகாலட்சுமியை வைத்தபடி அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். பெருமாள், புதன் கிரகத்திற்கும், தாயார் சுக்ரனுக்கும் அதிபதி ஆவர். எனவே இத்தலம், "புதசுக்ர பரிகார க்ஷேத்ரம்' என்றும் அழைக்கப்படுகிறது.புதன் கிரக தோஷம் உள்ளவர்கள் பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்தும், சுக்ரதோஷம் உள்ளவர்கள் மகாலட்சுமிக்கு குங்கும அர்ச்சனை செய்தும் வழிபடுகிறார்கள். பாற்கடலில் மகாலட்சுமி தோன்றி, பகவான் விஷ்ணுவை கணவராக அடைய விரும்பி அவரையே அடைந்தாள்.தேவாசுரர் கூட்டத்தில் மகாலட்சுமி தன்னை தேர்ந்தெடுத்ததை சிறப்பிக்கும் பொருட்டு, அப்பெண்மைக்கு மதிப்பளிக்கும் விதத்தில், விஷ்ணு அவளைத் தன் இடது தொடை மீது அமர்த்தி தாமரை மலர் மேல் அமர்ந்து லட்சுமி நாராயணனாக காட்சி அளித்தார்.அலங்காரப் பிரியரான பெருமாளுக்கு இங்கு நடக்கும் அலங்கார ஆராதனைகள் அற்புதமானவை.திருமணத்தடை உள்ள பெண்கள் சுவாமி முன்பு பச்சரியின் மீது தேங்காயில் நெய் விளக்கு ஏற்றி வைத்து வழிபடுகிறார்கள்.இங்கு வேண்டிக்கொண்டால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
தல வரலாறு:
சுமார் எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது இந்த ஆலயம்.திருமால் அமர்ந்த நிலையில் உள்ள கோயில்கள் தமிழகத்தில் மிகவும் குறைவு. இவ்வகையில் இங்கு பெருமாள் அமர்ந்த நிலையில் அருள்பாலிக் கிறார்.மகாலட்சுமியை தன் மார்பில் சுமந்திருக்கும் திருமால் அவளைத் தமது மடியில் இருத்தியபடி காட்சிதரும் திருத்தலங்களில் இதுவும் ஒன்று. தன்னை வணங்கும் பக்தர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கவும், திருமணமான தம்பதிகள் மணம் ஒன்றி வாழவும் திருவுள்ளம் கொண்ட பெருமாள் இங்கு எழுந்தருளி அருள்பாலிப்பதாக தலவரலாறு கூறுகிறது.
சிறப்பம்சம்:
பெருமாள் இத்தலத்தில் தாயாரை இடது தொடையில் அமர்த்தியபடி அருள்பாலிப்பது சிறப்பு.
அதிசயத்தின் அடிப்படையில்: புதன், சுக்ரன் பரிகார தலம்.


இருப்பிடம் :
அருள்மிகு லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில்,தளபதி  சமுத்திரம்-கீழூர்,திருநெல்வேலி-627101.

பேருந்து வழிதடம்:
திருநெல்வேலி மற்றும் நாகர்கோவிலில் இருந்து புறப்படும் தடம் எண் 565திருநெல்வேலி/ நாகர்கோவிலில் பேருந்துகள் அனைத்தும் தளபதிசமுத்திரம் கீழூர் நின்று செல்லும்.
வள்ளியூர் இருந்து புறப்படும் பேருந்துகள்:
9L சிறுமளஞ்சி,மினிபேருந்துகள்(STN,அன்னை அருள்).

இறங்கும் இடம்: தளபதி  சமுத்திரம்,கீழூர்.
அருகிலுள்ள ரயில் நிலையம் வள்ளியூர்-8km,நாங்குநேரி-7km

அருகிலுள்ள விமான நிலையம் :
மதுரை, திருவனந்தபுரம் .

தங்கும் வசதி :
வள்ளியூர்,திருநெல்வேலி

திருநெல்வேலி-ஹோட்டல் ஆர்யாஸ் போன்: 0462-2339002
வள்ளியூர்-ஹோட்டல் வெங்கடேஸ்வரா லாட்ஜ்-0462-235174


Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Coupons