இந்த வலைப் பூவில் உங்கள் ஊரில் உள்ள ஆலயங்கள் பற்றிய தகவல்களை உங்கள் பெயரிலேயே வெளியிட ஆலய புகைப்படத்துடன் விபரங்களை அனுப்பலாம் aalayankal@gmail.com

Tuesday, September 29, 2015

ஆதிதிருவரங்கம், திருவண்ணாமலை மாவட்டம்

ஆதிதிருவரங்கம், திருவண்ணாமலை மாவட்டம் 
.......................................................................................................

இம்முறை திருவண்ணாமலை பயணத்தின் மறுநாள் ஆதிதிருவரங்கம் என்னும் பழங்கால திருக்கோயில் பற்றி அறிந்து அங்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.  திருவண்ணாமலையில் இருந்து 30 நிமிட பயனதூரத்தில் அமைந்துள்ளது இந்த தொன்மை வாய்ந்த திருத்தலம். சிறு கிராமம் ஒன்றில் வறண்ட ஆற்றங்கரையின் அருகே கம்பீரமாய் காட்சி தருகிறது .


நீண்ட மற்றும் உயர்ந்த மதில் சுவர்கள் ஒரு பழங்கால கோட்டையை நினைவு படுத்துகிறது . நாங்கள் அங்கு சென்ற பொழுது திரண்டிருந்த மக்கள் வெள்ளம் கண்டு திகைப்படைந்தோம். பின்பு தான் புரட்டாசி முதல் சனிக்கிழமை என்பதால் பெருமாளை தரிசிக்க குவிந்த பக்தர்கள் என்பதை அறிந்து வியந்தோம். 

வியப்பை மேலும் அதிகரித்த செய்தி அது உள்ளூர் மக்கள் கூட்டம் இல்லை என்பதும் அவர்கள் அனைவரும் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் . ஒவ்வொரு வருடமும் புரட்டாசி முதல் சனிக்கிழமை சேலத்தை சார்ந்த பக்தர் ஒருவர் 30 க்கும் மேற்பட்ட பேருந்துகளை கொண்டு பெருந்திரளான மக்களை அழைத்து வந்து பூஜைகள் மற்றும் மிகசிறப்பான அன்னதானம் செய்கிறார் !


அரங்கநாதராய் காட்சியளிக்கும் பெருமாளை காணக்கண் கோடி வேண்டும் என்பது இங்கு நிதர்சனம்.  கோயிலின் தல வரலாறு அறிய இயலவில்லை என்பதே சற்று வருத்தம். எனினும் இந்த பதிவை படிக்கும் எவரும் அதை  அறிந்திருந்தால்  aalayankal@gmail.com  என்ற மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். புராதன சிலைகளும் மிகப்பெரிய வெளிபிரகாரமும் ஓங்கி வளர்ந்த தேக்கு மரங்களும் பழமைக்கு அழகு சேர்க்கிறது .

மூலவரின் திருகோவிலின் திருக்கலசங்கள் 


சிறப்புக்கு சிறப்பாய் அங்கு அமைந்துள்ள தொன்மை வாய்ந்த நெற்களஞ்சியம் 
பெரும் வியப்பை தருகிறது Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Coupons