அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், மேலகடம்பூர், கடலூர் மாவட்டம்



கடலூர் மாவட்டத்தின் தெற்கு பகுதியில் வடவாற்று கரையில் அமைந்துள்ளது மேலக்கடம்பூர் . இங்கு ஒரு அழகிய சிவாலயம் அமைந்துள்ளது.இரண்டு குதிரைகள் பூட்டப்பெற்ற அழகிய தேர் வடிவில் அமைந்த கோயில். தேவார பாடல் பெற்ற தலங்களில் இது காவிரி வடகரை தலங்களில் 34வது தலமாக விளங்குகிறது. திருநாவுக்கரசர்,திருஞான சம்பந்தர் ஆகியோர் மூன்று பதிகங்கள் பாடியுள்ளனர். சுந்தரர், மாணிக்கவாசகர் வைப்புதலமாக பாடியுள்ளனர். மேலும் வள்ளலார்,வண்ணசரபம் தண்டபாணி சுவாமிகள், பாம்பன் சுவாமிகள் ஆகியோரும் பாடி பரவிய தலம்.


இந்த தேர்வடிவ கோயிலுக்கு கரக்கோயில் என்று பெயர்.கடம்ப மரத்தினை தல மரமாக கொண்ட கோயிலுக்கும் கரகோயில் என பொருள் கொள்ளலாம் மூலவர் சுயம்பு லிங்கமாக உள்ளது சிறப்பு.
இந்திரனின் தாயார் தினமும் இங்கு வந்து வழிபடுவதை வழக்கமாக கொண்டதாகவும், அதனால் இந்திரன் இம் மூலவரை இந்திர லோகம் கொண்டு செல்ல எண்ணி குதிரைகள் பூட்டிய அழகிய தேரில் வைத்து எடுத்துசெல்லும் போது தல விநாயகரை வணங்காமல் அலட்சியபடுத்தி தேரை நகர்த்துகிறான்.விநாயகர் விஸ்வரூபம் எடுத்து தேரினை காலால் அழுத்த தேர் அழுந்தி கல்லாகிறது ,கோயிலை எடுக்கவந்த  இந்திரன் வினாயகரிடம் பாப மன்னிப்பு கோருகிறான் ஓர் நாழிகையில் கோடி லிங்க பிரதிஷ்ட்டை செய்ய ஆணையிடுகிறார் , இந்திரன் லிங்கம் செய்யசெய்ய உடைந்து கொண்டே இருக்கிறது பிழை உணர்ந்த இந்திரன் தான் என்ற அகந்தை அழிந்து மன்னிப்பு கோர ருத்ர கோடி மந்திரம் சொல்லி ஓர் லிங்கம் பிரதிஷ்ட்டை செய்கிறான் . இந்த புராண வரலாறை முதலாம் குலோத்துங்கன் சிற்ப கலை  சிறப்பு மிக்க அழகிய தேர் வடிவ கோயிலாக கி.பி 1113 ம் ஆண்டில் உருவாக்கினான்.அதற்க்கு முன்னர் இக்கோயில் செங்கற்க்களால் அமைந்திருந்தது

 

கோவிலின் புறசுவர் முழுவதும் சைவ வைணவ கதைகளை விளக்கும் சிற்ப்பங்களும் அறுபது மூன்று நாயன்மார் வரலாறும் சிற்ப்பங்கலாக வடிக்கப்பட்ட்டுள்ளன,
ராஜேந்திர சோழ மன்னன் கங்கை படை எடுப்பின் போது அங்கிருந்த கணபதி சிலைகளை கொண்டுவந்து இக்கோயிலில் பிரதிஷ்ட்டை செய்தான் மேலும் வங்க படையெடுப்பின் போது மஹிபாலனை வென்று அங்கிருந்து பிரதோஷ காலத்தில், ரிஷபத்தின் மீது நின்று ஆடும் சிவனின் சிலையை (தசபுஜரிஷபதண்டவமூர்த்தி) வெற்றி சின்னமாக  கொண்டுவந்தான் பிரதோஷ நாளில் மட்டுமே இச்சிலையினை காணமுடியும் .மேலும் இக்கோயிலை பற்றி அறிந்துகொள்ள http://kadamburtemple.blogspot.com என்ற வலை பூவினை பார்க்கவும் 

5 comments

ஆன்மீக உலகம் said...

தான் என்ற அகந்தையை அழிக்க வேண்டும் என்ற நியதியை இந்திரன் ஆனவத்தை வினாயகர் ஒழித்த செய்தி மூலம் இந்த பதிவு உணர்த்துகிறது.. பகிர்வுக்கு நன்றி.

இராஜராஜேஸ்வரி said...

அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

வலைச்சர அறிமுகத்திற்கு
வாழ்த்துகள்..பாராட்டுக்கள்.

http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_15.html

துரை செல்வராஜூ said...

அன்புடையீர்!.. வணக்கம் .
இன்று தங்களின் வலைதளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது.
வாழ்த்துக்கள்!
http://blogintamil.blogspot.com/2013/10/blog-post_15.html?

Ranjani Narayanan said...

இன்றைய வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்!achtsit 353

கலையன்பன் said...

வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்.

Powered by Blogger.