ஸ்ரீ சத்குரு சதா சிவப்பிரமேந்திராள் மஹா சந்நதி , நெரூர்


கரூர் மாவட்டத்தில் இருந்து 12 கி.மீ தொலைவில் உள்ள சிற்றூர் நெரூர்.இங்கு வயல் வெளிகள் நிறைந்த காவேரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது ஸ்ரீ சத்குரு சதா சிவப்பிரமேந்திராள் மஹா சந்நதி. மிகவும் தொன்மையான வரலாறு கொண்ட சிறப்பு மிக்க தலம் , குடமுழுக்கு கண்டு புதுபொலிவுடன் காட்சி தருகிறது. 


காசி விஸ்வநாதர் ,விசாலாட்சி அம்மன் சன்னதிகள் உள்நுழைந்ததும் நம்மை ஆசிர்வதித்து வரவேற்கிறது.




சுமார் 350 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த  சதாசிவ பிரமேந்திரரர்  அவர்களின் ஜீவசமாதி காசி விஸ்வநாதர் சிலை அமைந்துள்ள கருவறையை சுற்றி வரும் பொழுது அதன் நேர் பின்பக்கம் அமைந்துள்ளது.
அதன் சிறப்பு :
நெரூர் வந்து சேர்ந்த சதாசிவ பிரம்மம் தந்து சீடர்களான புதுக்கோட்டை மகாராஜா,மைசூர் மகாராஜா,தஞ்சாவூர் மகாராஜா ஆகியோரை அழைத்து "இங்கு குகையமையுங்கள்.நான் உட்கார்ந்ததும் சாமகிரியைகளால் மறைத்து விடுங்கள் " என்றார் ."விபூதி,உப்பு,மஞ்சள் தூள்,செங்கற்பொடி போட்டு மூடிவிடுங்கள்.ஒன்பதாம் நாள் சிரசின் மேல் வில்வ விருட்சம் தோன்றும் .பன்னிரெண்டாம் நாள் காசியிலிருந்து சிவலிங்கம் வரும்.அதை 12  அடிக்கு கிழபுரம் வைத்து கோயில் காட்டுங்கள் .இந்த வில்வ விருட்சத்திற்கு எந்த மறைப்பும் வேண்டாம் .மேடை போட்டு விடுங்கள் "என்று அருளினார் .

அதன்படியே செய்தனர். அவர் சொன்னபடி ஒன்பதாம் நாள் வில்வ மரம் தோன்றியது .(இன்றும் நாம் வழிபடும் வில்வ விருட்சம் இது தான் ) பன்னிரெண்டாம் நாள் அவர் சொன்னபடி காசியிலிருந்து ஒரு பிரம்மச்சாரி ஒரு சிவலிங்கம் கொண்டு வந்தார் 12  அடிக்கு கீழ்புறம் அதை வைத்து கோயில் கட்டினர்.மகரிஷிகளின் சமாதி மீதே  கோயில் கட்டுவது வழக்கம் .நெரூரீல் மட்டுமே சமாதிக்கு 12  அடிக்கு கீழ்புறம் சிவலிங்கத்தை வைத்து கோயில் கட்டப்பட்டுள்ளது .இங்கு துவாதசாந்த பெருவெளியில் சதாசிவ பிரம்மம் எழுந்தருளியிருக்கிறார்.துவாதசம் எனில் 12  அங்குலம் .அங்குலத்தை அடியாக கொண்டு சிவலிங்கத்தை அமைத்துள்ளனர் .

மிக தொன்மையும் பெருஞ்சிறப்பும் பெற்ற இந்த திருகோயில் காவிரி கரையோரம் வயல் வெளிகளுக்கு நடுவில் அமைந்துள்ளது இறைவனின் சித்தம் .
   

3 comments

ஆன்மீக உலகம் said...

தேர் வடிவில் அமைந்த கோயில் படத்தில் பார்க்கும்பொழுதே மனதை கொள்ளை கொள்கிறது.. படம் கோவிலுக்கு செல்லும் ஆவலை தூண்டுகிறது.

ஆன்மீக உலகம் said...

காசிவிஷ்வநாதர், விசாலாட்சி அம்மன் ஆசிர்வதித்து வரவேற்ற பகிர்வுக்கு வணக்கம்.

ஆன்மீக உலகம் said...

வில்வமரம்.. வழிபடும் வில்வ விருட்சம் செய்தி தெரிந்துகொள்ளமுடிந்தது.. நன்றி சகோ!

Powered by Blogger.