திருவண்ணாமலை நிறைவு பகுதி (சில அரிய புகைப்படங்களுடன் )


மலையே சிவமாக போற்றப்படும் திருவண்ணாமலையில் ,கிரிவலபாதையில் அஷ்டலிங்கங்களும் பல்வேறு கோயில்களும் மடங்களும் புண்ணிய தீர்த்தங்களும் அமைந்து சிறப்புக்கு சிறப்பு சேர்த்து வருகிறது .கிரிவலபாதையில் பகவான் ரமண மகரிஷி ஆஷ்ரம் அனைவரும் தவறாது தரிசித்து வரும் ஆன்மீக சிறப்பு வாய்ந்த இடம் .முன்பதிவு செய்தவர்கள் அங்கு தங்கி  சேவை செய்யவும் அனுமதி உண்டு . சற்று நேரம் அங்கு அமர்ந்து தியானம் செய்து பகவானின் அருளாசிகளை உணரலாம் .அருகில் ரமண மகரிஷியை சிறுவயதில் ஆதரித்து அன்பு காட்டிய சேஷாத்ரி சுவாமிகள் ஆஷ்ரம் உள்ளது .மிக அமைதியான இடம் ஆன்ம திருப்தியை தரும் என்பது நிதர்சனம்.


கிரிவல பாதையில் அமைந்துள்ள யோகிராம் சுரத்குமார் ஆஷ்ரம் மற்றுமொரு பெரும் சிறப்பு வாய்ந்த இடம் .அழகிய கட்டிட வேலைப்பாடு கொண்ட இங்கு "யோகி ராம் சுரத்குமார்...யோகி ராம் சுரத்குமார்..." என்று ஓயாது பாடும் அவர் பக்தர்கள் குரல் நம் நெஞ்சை விட்டு நீங்க நீண்ட நேரம் பிடிக்கும் .


கிரிவலபாதை மட்டுமின்றி மலை மீதும் பல விஷேச கோயில்கள் இடங்கள் உள்ளது. குறிப்பிடத்தக்க இடங்கள் விருப்பாஷி குகை ,



மற்றும் ஸ்கந்தாஷ்ரம் 
ஓம் அருணாச்சல சிவ அருணாச்சல சிவ அருணாச்சல சிவ அருணாச்சலா!
ஓம் அருணாச்சல சிவ அருணாச்சல சிவ அருணாச்சல சிவ அருணாச்சலா!!


No comments

Powered by Blogger.