அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை (பகுதி -3)


சுயம்பு மூர்த்தியான அண்ணாமலையாரை வழிபட்டு வெளியே வந்து முதல் பிரகரமாகிய மேடையை வலம் வரும் பொது கோஷ்டங்களில் தெற்கே தட்சிணாமூர்த்தி, மேற்கே லிங்கோத்பவர், வடக்கே பிரம்மா துர்க்கை ,சண்டேசுவரரை வழிபடலாம் .இரண்டாம் பிரகாரத்தில் அமைந்துள்ள வைகுண்ட வாயிலின் வழியாக வரும் பொது தீபமலையை பார்த்து வணங்கி அம்மன் சந்நிதியை அடையலாம்.அர்த்த மண்டபம் அடுத்த கருவறையில் அருள்மிகு உண்ணாமுலையம்மை சின்னஞ்சிறிய திருவுருவுடன் அருட்காட்சி வழங்கி நம் உள்ளத்தில் இடம் பெறுதலை தரிசித்து உணரலாம் .

தலமரம் : மகிழமரம் 

தீர்த்தம் : சிவகங்கை தீர்த்தம், பிரம்மதீர்த்தம்

மலைவலமும் அதன் சிறப்பும் :

திருவண்ணாமலை கிருதாயுகத்தில் அக்னிமலையாகவும் திரேதயுகத்தில் மாணிக்க மலையாகவும் ,துவாபரயுகத்தில் பொன்மலையாகவும் ,கலியுகத்தில் கல்மலையாகவும் மாறின எனப் புராணம் கூறும்.ஒவ்வொரு யுகத்திற்கும் ஏற்ப இம்மலை நெருப்பினால் தோன்றியது எனவும் குறிப்பிடபட்டுள்ளது .இத்தகைய மலையை கிரிவலம் வந்தால் சிவபெருமானையே வலம் வருவதற்கு ஒப்பாகும்.இறைவி இறைவனின் இடப்பாகம் அடைய இறைவன் மலையை சுற்றி வா எனக்  கூற அம்பிகை தன சிரம் மீது இருகைகளை கூப்பி  வலம் வந்ததாகவும் அதன் பிறகே இறைவனிடம் இடப்பாகத்தை அடைந்ததாகவும் கூறுவார்.அண்ணாமலையை வலம் செய்ய வேண்டும் என்று ஓரடி வைத்தவர்க்கு பூமியை வலம் செய்த பயன் உண்டாகும். மூன்றடி எடுத்து வைத்தவர்க்கு பலவகை தானங்களை செய்த பயன் உண்டாகும் .

இம்மலையை வலம் வருவோர் ஆதிவாரத்தில் சிவபதமும்,சோமவாரத்தில் இந்திர வாழ்வும்,மங்கள வாரத்தில் பிறவிப்பிணி நீக்கமும், புதவாரத்தில்  தேவராகும் தகுதியும் ,குருவாரத்தில் மேலான பதவியும் , சுக்ரவாரத்தில் விஷ்ணு பதவியும், சனிவாரத்தில் நவக்கிரக தோஷ நிவர்த்தியும் பெறுவார். 

சிவராத்திரி ,வருடப்பிறப்பு ,மாதப்பிறப்பு,பௌர்ணமி ,கார்த்திகை மாதம், திருமலை சுற்றி வருகின்றார்கள்.மலையை சுற்றி எண் திசைகளிலும் அஷ்டலிங்கம் அஷ்டநந்திகள் தீர்த்தங்கள் பலவும் , பல மண்டபங்களும்,பல ஆஷ்ரமங்களும் உள்ளன .அவை பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம் 

                                                           (தொடரும்....) 



No comments

Powered by Blogger.