ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலயம், வடமராட்சி, துன்னாலை - இலங்கை.





ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய முகப்புத் தோற்றம்..

வடமராட்சியில் துன்னாலை என்னும் இடத்தில் இருக்கும் வல்லிபுர ஆழ்வார் என்ற விஷ்ணுகோவில் இலங்கை மக்கள் அனைவரிடமும் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆலயம் மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்றும் ஒருங்கே அமையப் பெற்ற பெருமை உடையது.

ஸ்ரீ வல்லிவுர ஆழ்வார் கோவிலின் மூலஸ்தானத்தில் சக்கரத்தாழ்வார் வைத்தே பூஜைகள் நடைபெறுகின்றது.

இந்தக் கோவிலின் ராஜ கோபுரத்தில் மகாத்மா காந்தியின் சிலையும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.


உற்சவம் ஒன்றின் போது..



புரட்டாதி பூரணை தினத்தன்று வங்காளவிரிகுடாவில் சக்கரத்தாழ்வார், ஆஞ்சனேயர் சகிதம் தீர்த்தமாட செல்லும் காட்சி மிகவும் ரம்யமாக இருக்கும்.

இந்த ஆலயத்தில் நடைபெறும் விழாக்கள்...

மகோற்சபம்
கிருஷ்ண ஜெயந்தி
தீபாவளி


ஆலயத்தின் தனிச்சிறப்பு..

இந்த ஆலயத்தில் விபூதியும், திருநாமமும் பிரசாதமாக வழங்கப் படுகிறது.

1 comment

Athiban said...

நல்ல பதிவு.

http://tn-tourguide.blogspot.com

http://senthilathiban.blogspot.com

Powered by Blogger.