பேரூர் பட்டீஸ்வரர்

பழைய படம் 
சுமார் 1800 ஆண்டுகள் பழமைவாய்ந்த திருத்தலம் திருப்பேரூர் (இன்றைய  பேரூர்).கரிகால் சோழன் , நாயக்க மன்னர்கள் ,சேர ,சோழ ,பாண்டிய மன்னர்கள் ,மைசூர் மன்னர்கள் ,விஜயநகர அரசர்கள் வணங்கிய தலம் இது.பிரம்மா,திருமால், அதி உக்ரகாளி ,நந்தி,சுந்தரர் ஆகியோருக்காக நடராஜர் சிதம்பரத்தில் ஆடியது போல ஆனந்த நடனம் புரிந்ததும் , அருணகிரி நாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற தண்டபாணி உள்ளதும், காமதேனு முக்தியடைந்ததும் ,எப்போதும் நாராயணனை வணங்கிய  நாரதர் வழிபட்ட சிவன் இருப்பதும் ,பட்டிபுரி, ஆதிபுரி , ஞானபுரி,மேலைசிதம்பரம் என்றெல்லாம் அழைக்கப்படும் பெருமை வாய்ந்த கோயில் இது.
                                  சோழ அரசனால் அமைக்கப்பட்ட கருவறையில் இறைவன் லிங்கவடிவில் பட்டீஸ்வரன் என்ற நாமத்துடன் தரிசனம் தருகின்றார் . பச்சைநாயகி அம்மன் தன் சன்னதியில் பத்ம பீடத்தில் நின்ற நிலையில் வலது கையில் நீலோத்பவ மலருடன் ,இடக்கை டோல ஹஸ்தமாக அருள் வழங்கும் கண்களுடன் காட்சி அளிக்கின்றார்.
                                       தல விருட்சம் பன்னீர்மரம் (சித்தேச மரம் ) மூலவருக்கு பின்னாலேயே அமைந்துள்ளது .காமதேனுவின் கொம்பினால் குத்தி உருவாக்கப்பட்ட தீர்த்தம் சிருங்கக்கிணறு மூலவருக்கு இடதுபுறம் முன்னால் அமைந்துள்ளது .கொடிமரத்திற்கு முன்ன்னல் நின்று வெள்ளை கோபுரம் வழியே பார்த்தால் பட்டீஸ்வரர் கருவறை விமானம் தெரிகிறது.இது போன்ற அமைப்பு மதுரை மற்றும் சில தளங்களிலே யே உள்ளதாகும் .
                                   திருவிழாக்கள்    பங்குனி உத்திரத்தில் கொடியேற்றத்துடன் நடத்தப்படும் பிரம்மமோற்சவம் தவிர திருவாதிரை திருவிழாவும் சிறப்பாக கொண்டாட  படுகின்றது . இங்கு மட்டுமே மிகசிறப்பாக ஆணி மாதம் கிருத்திகை தொடங்கி 9 நாட்கள் நாற்று நாடும் விழா நடைபெறும் . விழாவின் 10 வது நாளில் சிவபெருமான் நாற்று நாடும் காட்சியோடு விழா நிறைவுபெறும் .
                                                             பூஜைகள்   காலை 5.30 மணி முதல்  1 மணி வரையும் மீண்டும்  4 மணி முதல் இரவு  9  மணி வரையும் நடை திறக்கபட்டிருக்கும் .கோபூஜை ,கஜபூஜை தவிர தினசரி நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றது .கிருத்திகை தோறும்  கடந்த 34 ஆண்டுகளாக 108விளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றுவருகிறது .தற்போது பிரதிவாரம் வெள்ளிகிழமைகளில் திருவிளக்கு வழிபாடு நடை பெறுகின்றது .
தற்போதைய படம்
வரும்        நவம்பர்     மாதம்       12 - ம் தேதி கும்பாபிஷேகம் காண இருக்கும் இத்திருக்கோயிலில் பிறவா வரம் தரும் சிவபெருமானை வழிபட்டு அருள்பெறுவோம் !

1 comment

Anonymous said...

அன்பரே.. தங்களின் பேரூர் பட்டீஸ்வரர் பற்றிய விளக்கங்கள் மனதிற்க்கு நிம்மதியை தந்தன. கீழே உள்ள சுட்டியில் இன்று காலை 12.11.10 ஒலிஉலாவந்த பேரூர் பட்டீஸ்வரர் கும்பாபிகேஷ சிறப்பு நிகழ்ச்சி இனிய பாடல் தொகுப்புடன் உங்கள் தளத்தையும் தொடர்பு கொடுத்துள்ளேன். நன்றி.

http://paasaparavaikal.blogspot.com/2010/11/107.html

நீங்களும் கேட்டு மகிழுங்கள்.

கோவை ரவி

Powered by Blogger.